அனிகா வெளியிட்ட புகைப்படம்... சுடிதாரில் கூட எம்புட்டு அழகுனு பாருங்க
நடிகை அனிகா சுரேந்திரன் பெரும்பாலான நேரங்களில் கிளாமர் உடையணிந்து புகைப்படம் வெளியிடும் நிலையில், தற்போது சுடிதாரில் வெளியிட்ட புகைப்படம் ட்ரெண்டாகி வருகின்றது.
நடிகை அனிகா சுரேந்திரன்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக கலக்கி வருகின்றார் நடிகை அனிகா சுரேந்திரன்.
2013ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா, தமிழில் 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்து அசத்தினார்.

பின்பும் அஜித்துடன் விசுவாசம் படத்தில் மகளாக நடித்து அசத்தியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நடிப்பு மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து தனக்கான இடத்தினை தக்க வைத்து வருகின்றார்.
இவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது 21 வயதாகும் நிலையில், புடவை, மாடர்ன் உடைகள் என அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

தற்போது சற்று மாறுதலாக சுடிதார் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படத்திலும் முன்னணி நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவில் மிகவும் அழகாகவே காணப்படுகின்றார்.



| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |