புதிய கலையை பயிலும் நடிகை அனிகா சுரேந்திரன்! என்னன்னு தெரியுமா?
நடிகை அனிகா சுரேந்திரன் ட்ரெண்டிங் உடையில் பானை செய்ய கற்றுக்கொள்ளும் அழகிய புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.குறித்த புபை்படங்கள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
அனிகா சுரேந்திரன்
மலையாள மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோயினாகவும் அசத்தி வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் த்ரிஷாவின் மகளாக தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் முதல் படத்திலேயே தனது ஒரு தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம்தையே உருவாக்கிக்கொண்டார்.
இதனை தொடர்ந்து அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விசுவாசம் திரைப்டத்தில் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
நடிகை நயன்தாராவின் பாணியை இவர் பின்பற்றுவதால் அனிகாவை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என்ற செல்ல பெயரால் குறிப்பிடுகின்றார்கள்.
தற்போது ஹீரோயினாகவும் சினிமாவில் ஒரு ரவுன்டு வரும் அனிகா சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் சிம்பிளான மேக் அப்பில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கியூடான ஆடையில், தற்போது வெளியிட்டுள்ள பானை செய்ய கற்றுக்கொள்ளும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |