அங்கோலா ரோட்டு கடை ஸ்பெஷல் வாழைப்பழம் இறால் பஸ்ட்ரீஸ்
அங்கோலா என்பது ஆப்பிரிக்காவின் கனிம வளம் நிறைந்த நாடாகும்.
இங்கு உள்ள இயற்கை அழகை காண்பதற்கு அவ்வளவு அழகாக இருக்குமாம். இதனால் இந்த நாட்டிற்கு சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு பருவ காலங்களில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
நீர்வீழ்ச்சி (Kalandula Falls), துண்டவாலா பிளவு (Tundavala Fissure) மற்றும் கடற்கரைகள் இங்கு பிரபலமாக உள்ளன. அதே சமயம், எண்ணெய் துவக்கம் வைர உற்பத்தி வரை இங்கு உற்பத்திச் செய்யப்படுகின்றன.
இவ்வளவு பிரபலமான நாட்டின் ரோட்டுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழம் இறால் பஸ்ட்ரீஸ் எப்படி செய்யலாம் என்ற சந்தேகம் அங்கு சென்று சாப்பிட்டவர்களுக்கு இருக்கும்.
அப்படியாயின், அங்கோலா ரோட்டு கடை ஸ்பெஷல் வாழைப்பழம் இறால் பஸ்ட்ரீஸ் எப்படி செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- மைதா – 2 கப்
- வெண்ணெய் / எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
- உப்பு –தேவையான அளவு
- சூடான நீர் – தேவையான அளவு
- நன்றாக பழுத்த வாழைப்பழம் – 3
- சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
- இலவங்கப்பட்டை தூள்– ¼ டீஸ்பூன்
- சுத்தம் செய்த சிறிய இரால் – 150g
- வெங்காயம் — 1 (நறுக்கியது)
- பூண்டு – 3 பல் (நறுக்கியது)
- மிளகாய் தூள் / பாப்ரிக்கா – ½ டீஸ்பூன்
- மிளகு தூள் – ¼ டீஸ்பூன்
எப்படி இலகுவாக செய்யலாம்?
முதலில் ஒரு பவுலில் மைதா, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். அதன் பின்னர், சூடான நீரைக் கொண்டு, மாவை நன்றாக பிசையவும். இந்த மாவை 20 நிமிடங்கள் வரை மூடி தனியாக வைக்கவும்.

அடுத்து, பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் சர்க்கரை, இலவங்கப்பட்டை தூள், வெண்ணெய் ஆகியவற்றை போட்டு நன்றாக பிசையவும். கெட்டியாகும் வரை 5 நிமிடங்கள் கலந்து கொண்டே இருக்கவும்.
இது ஒரு புறம் இருக்கையில் சுத்தம் செய்து வைத்த இறால்களை ஒரு பவுலில் தயார் நிலையில் வைத்துக் கொண்டு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கவும். இறாலை அதனுடன் சேர்த்து கொஞ்சமாக வதங்க விடவும். இந்த கலவைக்கு சுவை சேர்க்கும் மிளகாய் தூள், மிளகு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

மாவை சிறிய பந்து போன்று உருட்டி சப்பாத்திக்கு போன்று நன்றாக ரோல் செய்யவும், அதற்கு நடுவில் வாழைப்பழங்கள், இறால் ஆகியவற்றை வைத்து பிறை வடிவில் மடிக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதனுள் பஸ்ட்ரீகளை போட்டு, பொன்னிறமாக மாறும் வரை பொரித்தெடுக்கவும். இப்படி செய்தால் சுவையான அங்கோலா ரோட்டு கடை ஸ்பெஷல் வாழைப்பழம் இறால் பஸ்ட்ரீஸ் தயார்!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |