Andrea: காதலர் தினத்தில் முன்னாள் காதலருக்கு ஆண்ட்ரியா போட்ட பதிவு ...
நடிகை ஆண்ட்ரியா இன்று காதலர் தினத்தில் ஒற்றை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பாடகி, நடிகை, டப்பிங் கலைஞர் என பன்முக திறமையாளராக விளங்குபவர் தான் நடிகை ஆண்ட்ரியா.
இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்.
பாடகியாக சினிமாவில் அறிமுகமாகிய இவர் கண்டநாள் முதல் படத்தின் மூலம் நாயகியாக சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன்,என்றென்றும் புன்னகை, மாஸ்டர் போன்ற படங்கள் இவருக்கு நடிகையாகவும் நல்ல வரவேற்பை கொடுத்தது.
மேலும் பல ஹிட் பாடல்கள் மூலம் பாடகியாகவும் கலக்கி வருகின்றார்.இவருக்கு வடசென்னை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
அதன்பின் தொடர்ந்து நல்ல திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து வரும் நடிகை ஆண்ட்ரியா, ஆண்ட்ரியா பல ஆண்டுகளுக்கு முன்னர், இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்தது அனைவதும் அறிந்ததே.
இருவரும் ஒன்றாக நிகழ்சிகளில் பங்கேற்பது, தனிமையில் சந்தித்துக் கொள்யும் புகைப்டங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது போன்றவற்றின் மூலம் தங்களின் காதலை மறை முகமாக அறிவித்தனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.
இதுமட்டுமன்றி அனிருத்தை விட ஆண்ட்ரியா சுமார் 5 ஆண்டுகள் பெரியவர். இது தொடர்பாக அனிருத் பேட்டி ஒன்றில் பேசுகையில் பிரிவுக்கு காரணமே வயது வித்தியாசம் தான் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், காதலர் தினமான இன்று, ஆண்ட்ரியா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது ஒற்றை புகைப்படத்துடன் கேப்ஷனில்" ஒரு காலத்தில் நான் உன் காதலியாக இருந்தேன். ஆனால் நான் இப்போது சுதந்திரமாக உள்ளேன்.
மேலும், நானும் எனது ஆன்மாவும் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது இதயம் எப்போதும் எனக்கானது " என பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |