ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு தீர்வு கொடுக்கும் மட்டன் குழம்பு! ஆந்திரா பாணியில் இப்படி செய்ங்க
பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பத்துக்குரிய உணவுகளின் பட்டியலில் மட்டன் நிச்சயம் முக்கிய இடத்தை பிடித்து விடுகின்றது.மட்டனை ஒரு உணவாக மட்டுமே கருதக்கூடிய நமக்கு அதில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது சரிவர தெரியவில்லை.
ஆட்டு இறைச்சி சாப்பிடுவதால் உடலில் ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளை சரிசெய்ய முடியும். காரணம் இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, வைட்டமின் கே மற்றும் ஈ ஆகியவை அடங்கியுள்ளது. மேலும் கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், செலினியம் ஒமேகா 3 போன்ற கொழுப்புச் சத்துக்களும் அடங்கியுள்ளது.

ஆட்டு இறைச்சியை குறிப்பாக ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,ஆண்களின் மலட்டுத் தன்மை நீங்குவதற்கும் பெரிதும் துணைப்புரியும்.மருத்துவத்தின் மூலம் கூட இவ்வளவு வேகமாக குணப்படுத்த முடியாது, அந்த அளவுக்கு ஆண்களின் மலட்டுதன்மையை போக்குவதில் ஆற்றல் காட்டுகின்றது.
ஆட்டிறைச்சியில் நல்ல கொழுப்புக்கள் நம் உடலை ஆரோக்கியம் குறையாமல் காக்கிறது. இதில் உள்ள புரதங்கள் சிறிதளவே உண்டாலும் வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பதால் டயட் இருப்பவர்கள் கூட இதனை எடுத்து கொள்ளலாம்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஆட்டிறச்சியில் ஆந்திரா பாணியில் அசத்தல் சுவை குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு
மட்டன் - 500 கிராம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
தயிர் - 1/4 கப்

வறுத்து பேஸ்ட் செய்வதற்கு
மிளகு - 1/4 தே.கரண்டி
கருப்பு ஏலக்காய் - 1
பச்சை ஏலக்காய் - 2
கிராம்பு - 4-5
ஜாதிபத்திரி - 1
பட்டை - 1 இன்ச்
வரமிளகாய் - 2
முந்திரி - 12
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 இன்ச்
துருவிய தேங்காய் - 1/4 கப்
தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 1/4 கப்
சீரகம் - 1 தே.கரண்டி
பிரியாணி இலை - 2
வரமிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மல்லித் தூள் - 2 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை
முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து இரண்டு முறை கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கழுவிய மட்டனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு பாத்திரத்தை மூடி ஒரு மணிநேரம் வரையில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், ஜாதிபத்திரி, கிராம்பு, பட்டை, வரமிளகாய், முந்திரி, பூண்டு, இஞ்சி, துருவிய தேங்காய் ஆகியவ்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து, நல்ல மணம் வரும் வரையில் நன்றாக வறுத்து இறக்கி குளிரவிட வேண்டும்.

பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பிரியாணி இலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு மூடி வைத்து 4-5 நிமிடம் வரையில் நன்கு நன்கு வேகவிட்டு, பின்னர் மூடியைத் திறந்து மட்டனைக் கிளறி, அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்கு 4-5 நிமிடம் கிளறி விட்டு வேகவிட வேண்டும்.
நன்றாக வெந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மல்லித் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிளறி, மூடி வைத்து 4-5 நிமிடம் வேகவிட்டு, இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், ஆரோக்கியம் நிறைந்த ஆந்திரா மட்டன் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |