பிரபல ரிவியில் இருந்து விலகுகிறாரா பிரியங்கா? உண்மையை உடைத்த பிரபலம்
தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் கோபிநாத் இருவரும் பிரபல ரிவியிலிருந்து விலகுவது குறித்த தகவலை பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா, சமீபத்தில் வசி என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்த இவர், பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருகின்றார்.
தொகுப்பாளினியாக மட்டுமின்றி பல ரிவி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார். இவர் 2016ம் ஆண்டு பிரவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.
இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் பிரிந்த இவர், தனது வேலையில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் தொழில் செய்துவரும் வசி என்பவரை காதலித்து கடந்த 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர் டிஜே-வாகவும் இருந்து வருகின்றார்.
விலகுகிறாரா பிரியங்கா?
இந்நிலையில் பிரபல ரிவி தற்போது கைமாறிவிட்டதாகவும், அதில் பல ஆண்டுகளாக இருக்கும் தொகுப்பாளர்களான கோபிநாத் மற்றும் பிரியங்கா இருவரும் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரியங்கா எப்பொழுதும் தன்னை பற்றி வரும் சர்ச்சையைக் குறித்து எதுவும் பேசமாட்டார். சமீபத்தில் நடைபெற்ற அமீர் பாவனி திருமணத்தில் கலந்து கொண்ட பின்பு, தற்போது தேனிலவிற்காக லண்டன் சென்றதையும் பார்க்க முடிகின்றது.
தற்போது குறித்த சேனலில் இருந்து விலகியுள்ளாரா? என்பதை பிரபல ரேடியோ ஜாக்கி பேசியுள்ளார். திருமணத்திற்காக மட்டும் விடுப்பு எடுத்துள்ளதாகவும், ஹனிமூன் முடிந்து மீண்டும் பிரபல ரிவிக்கு வந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.
இதே போன்று கோபிநாத் விலகுவதற்கும் எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்று குறித்த பிரபலம் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |