பிரபல ரிவியால் பிரியங்காவிற்கு ஏற்பட்ட சம்பள பிரச்சினை... வெளியான ஆதங்கம்
தொகுப்பாளினி பிரியங்கா தான் வேலை செய்யும் ரிவியில் சம்பளம் அதிகரித்து தரவில்லை என்று தனது பிரச்சினையை வெளியிட்டுள்ளார்.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருபவர் தான் பிரியங்கா. இவர் சமீபத்தில் கூட நடந்துமுடிந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பல ஆண்டுகளாக தனது தொகுப்பாளினி வேலையில் சுட்டித்தனமான பேச்சினாலும் மக்களை கவர்ந்து வருகின்றார். சமீபத்தில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் பைனல் போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்துள்ளது.
சம்பளம் கொடுக்காமல் பிரபல ரிவி
இந்நிகழ்ச்சிக்கு அன்றைய தினம் காலை 11 மணிக்கே நேரு ஸ்டேடியத்திற்கு வந்த பிரியங்கா, தான் சமத்து பெண் என்றும் அதனால் தான் முன்பே நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்க்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் டிவிக்காக அதிகமாக உழைத்து வரும் தனக்கு சம்பளம் உயர்த்தி தர மாட்டேன் என்று கூறுகின்றனர் என தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
எப்பொழுதும் விளையாட்டாக மனதில் பட்டதை பேசும் பிரியங்காவின் குணம் தான் மக்கள் அவரை ரசிப்பதற்கு காரணமாகவே இருக்கின்றது. இந்நிலையில் சம்பளம் குறித்து பேசிய தகவல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |