காதலுக்கு மரியாதை விஜய் தோற்றத்தில் தொகுப்பாளினி டிடி... வைரலாகும் காணொளி
தொகுப்பாளினி டிடி காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் விஜய் அணிந்திருப்தை போன்று உடை அணிந்து புதிய தோற்றத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி
பிரபல தொகை்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் திவ்யதர்ஷினி. இவரை டிடி என ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.
காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார். விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை நிலைக்கவில்லை சட்டபடி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அண்மைகாலமாக உடல்நிலை காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். முழங்கால் வலிக்காக அவர் முதலில் செய்த ஆபரேசன் தவறாகி விடவே அது மேலும் அதிக வலியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது டிடி அவரது கால் பிரச்சனையை சரிசெய்ய முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு இருக்கிறார்.
நீண்ட நாட்களாக முழங்கால் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த இவர் தற்போது தான் சரியாகி இருக்கின்றார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிவது வழக்கம்.
இந்நிலையில் காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் அணிந்திருப்பதை போன்று ட்ரெண்டிங் உடையில் புதிய தோற்றத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |