உயிர் நண்பன் உதயநிதிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த சர்ஃரைஸ் கிப்ட்.. மகிழ்ச்சியில் குடும்பம்!
தமிழக சட்டசபை தேர்தலில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகி உள்ளார். '
இதையடுத்து, உதயநிதியின் நெருங்கிய நண்பரும் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேலும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியைக் கொடுத்து உதயநிதி ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இதனிடையே, சென்னையில் உள்ள நண்பர் உதயநிதி ஸ்டாலினை அன்பில் மகேஷ் சந்தித்தார். அப்போது, உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைப்பதற்கு, பெரிய புகைப்படம் ஒன்றை நினைவுப்பரிசாக வழங்கினார்.
அதில், மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல்.. என்ற திருக்குறள் அச்சிடப்பட்டுள்ளது. அன்பில் மகேஷின் எதிர்பாராத பரிசு உதயநிதியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கழக @dmk_youthwing செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினருமான திரு. @Udhaystalin அவர்களின் அமையவிற்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சிறப்பு மிகுந்த புகைப்படத்தை, நானும், சபரிஸ் மாப்பிள்ளை அவர்களும் பரிசாக வழங்கினோம். pic.twitter.com/4c9ZoTgecK
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 12, 2021