யார் இந்த ஆனந்த் ஸ்ரீனிவாசன் - வைச்சு செய்யும் நெட்டிசன்கள்; காரணம் என்ன?
பொதுவாக இணையவாசிகள் மீம்ஸ் கிரியேட்டர்கள் எதாவது ஒரு கண்டண்ட் கிடைத்துவிட்டால் போதும் அதை வைத்தே அந்த வாரம் முழுவதும் அவர்களை வைச்சு செய்துவிடுவார்கள்.
அதில், சினிமா, அரசியல், கலாச்சாரம், உணவு, ஊர் என எதன் பெயரிலாவது ட்ரெண்டாகும் கண்டெண்டை பிடித்துக்கொண்டு ஓட்டுவார்கள்.
அந்த வகையில் தற்போது சிக்கி இருப்பது, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் தான். இவர், தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் மற்றும் பொருளாதார நிபுணராக கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை கூறுவார்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே சேமிப்பின் அவசியத்தை பற்றியும் தேவையை பற்றியும் இளைஞர்களுக்கு யூ-டியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் எடுத்துரைப்பதோடு வயது வாரியாக அதற்கான திட்டமிடலையும் கூறிவருகிறார்.
அதிலும் கேட்போரை பேப்பரையும் பேனாவையும் எடுத்து அவர் மாதம் எவ்வளவும் செலவு செய்யலாம், எதெற்கெல்லாம் செலவு செய்யலாம், எதில் சேமிக்கலாம் எவ்வளவு சேமிக்கலாம் என்பதை பட்டியல் போட்டு கொடுத்தார்.
அதிலும், இவர் இன்றைய இளைஞர்கள்கள் சம்பாரிக்கவும், வேலை கிடைக்கவும் போராடி வரும் காலக்கட்டத்தில், இவர் கேட்கும் கேள்விகளால், சேமிப்பு இல்லாமல் வாழ்ந்தால் வாழ்க்கையே அவ்வளவுதான் என நினைக்கும் அளவுக்கு இவரின் பேச்சு இருக்கும்.
இவர் அண்மையில் பேசிய ஒரு வீடியோ கண்டெண்டை எடுத்து ட்ரெண்ட் செய்த இணையவாசிகள் அதையே பிடித்து பல டெம்ப்ளேட்டுகளை உருவாக்கி கடந்த ஒரு வாரமாக ஆனந்த் ஸ்ரீனிவாசனை சிலர் கண்டெண்ட் ஆக்கி வந்தாலும் இன்னும் பலர் அவருக்கும் அவரின் கருத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Advice for the Single pasanga ???#LifeLessons #reality #AnandSrinivasan #familylife #finance pic.twitter.com/H9ABPUfsqM
— Jasid (@JailJasid) August 5, 2022







