ராச்சத முதலையின் உடலில் சுற்றிக்கொண்ட அனகோண்டா... இறுதியில் என்ன நடந்தது?
மஞ்சள் நிற அனகோண்டா ராச்சத முதலையின் உடலில் சுற்றிக்கொண்டு அதன் அசுர பிடியில் வைத்திருக்கும் மிளரவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பொதுவாகவே உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான அனகோண்டாக்கள் அறியப்படுகின்றது.
அனகோண்டா பாம்புகள் நான்கு விதத்தில் வகைப்படுத்தப்படுகின்றன. பச்சை அனகோண்டா, மஞ்சள் அனகோண்டா, பொலிவியின் அனகோண்டா மற்றும் உடலில் கரும்புள்ளிகள் கொண்ட அனகோண்டா.
அனகோண்டாக்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய ஆற்றல் கொண்டவையாகும்.இவை பெரும்பான்மையான நேரத்தை குளிர்ச்சியான நீரிலேயே கழிக்கின்றன.
நிலப்பரப்பை விடவும் தண்ணீரில் எளிதாக நகர்ந்து செல்லக்கூடியவை. இவற்றின் முக்கியமான உணவு மீன், பறவைகள் பாலூட்டிகள், சிறுத்தை, பறவை முட்டைகள், ஊர்வன, நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள், காட்டுப்பன்றிகள், மான், செம்மறியாடுகள் போன்றவற்றை தனது இரையாக்கிக்கொள்கின்றன.
அனகோண்டாக்கள் அதன் உடல் எடைக்கு சமமாக உள்ள இரையைக் கூட வேட்டையாடும் அளவுக்கு ஆற்றல் கொண்ட பாம்பினமாகும்.
அதனை பறைசாற்றும் வகையில் தனது எடையில் இருக்கும் ராச்சத முதலையின் உடலில் சுற்றுக்கொண்டு அதன் பிடியில் வைத்திருக்கும் அனகோண்டாவின் பதறவைக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |