ஈழத்தில் புதுமையான அழகான ஒரு படைப்பு: பலரது வரவேற்பை பெற்ற பாடல்!
ஆண்வானம் காணொளிப்பாடல் இப்பொழுது வெளியிடப்பட்டு பலரதும் வரவேற்புகளையும் பெற்று வருகிறதுக்கு. யாழ்ப்பாணம் கிளிநொச்சி பூநகரி அக்கராயன் போன்ற எழில் மிகு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இதனை இயக்கியுள்ளார் அபயன் கணேஸ். இசையமைத்து பாடியுமுள்ளார் அங்குசன். ஒளிப்பதிவை ரெஜிமோகனும் ஒளித்தொகுப்பினை டிரோஷனும் செய்துள்ளார்கள். காட்சி அமைப்புகள் காட்சி மாற்றங்கள் மற்றும் கதையோட்டம் என்பன அழகாக இருக்கின்றது.
ஒரு பயணப் பாடலாக அமைந்திருப்பது சிறப்பே ஏனெனில் யாழ்ப்பாணத்தில் ஈழப்படைப்பாளிகள் மத்தியில் இதுபோன்ற பாடல் பெரிதாக வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். அது மட்டுமல்லாது இப் பாடலின் கதாநாயகியாக ஹிருனி வசுந்திரா நடித்துள்ளார் இவர் ஒரு சகோதர மொழிநடிகையாயினும் கணிசமான தமிழ் படைப்புகளில் பார்க்கக்கூடியது ஆரோக்கியமே.
காட்சியமைப்புக்கள் சிறப்பாக உள்ளது பாடல் வரிகளும் அழகாக உள்ளது பாடலில் இன்னும் சற்று நேர்த்தியை கொண்டுவந்திருக்கலாம் அடுத்த அடுத்த படைப்புகளை இதே குழுவிடம் எதிர்பார்த்து நிற்கிறோம்.
ஈழத்தில் புதுமையான அழகான ஒரு படைப்பு என்று தான் சொல்லவேண்டும். எனவே உங்களது ஒத்துழைப்பினையும் வழங்கி ஊக்கப்படுத்துமாறு கேட்டுநிற்கிறோம். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.