பார்ப்போரை கண் கலங்க வைக்கும் யானையின் பாசப்போராட்டம்: இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவம்!
பாசம், காதல், அன்பு எல்லாம் ஒரு வார்த்தையாக இருந்தாலும் அதன் ஒரு மனிதன் பூரணமடைகிறான்.
இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொறுந்தும், அன்பு எப்படி அனைவருக்கும் பொதுவானதோ அதேபோல மரணமும் பொதுவானதுதான்.
ஆனால் மரணம் எப்போது யாருக்கு நேரும் என்பது யாருக்கும் தெரியாது அப்படி ஒருவர் உயிரிழந்து விட்டாள் அந்த இழப்பு அவர்கள் குடும்பத்தினருக்கு மாத்திரம் அல்ல. அவர்கள் விரும்பி வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும் தான்.
அவ்வாறு தன்னை பாசமாக வளர்த்து வந்த எஜமானி உயிரிழந்த எஜமானிக்கு நன்றி செலுத்தும் காணொளி அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
உயிரிழந்த எஜமான்
இலங்கையில் தம்புள்ளை - கண்டலம பிரதேசத்தில் கடந்த வாரம் நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்திருக்கிறார். இவ்வாறு உயிரிழந்தவர் ஒரு யானையை வளர்த்து வந்திருக்கிறார்.
அந்தயானை அவரின் இறுதி அஞ்சலிக்கு சென்றிருக்கிறது. தனக்கு அன்பாக பார்த்து உணவு கொடுத்து வந்த எஜமானி இன்று இல்லை என்பதை நினைத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளது.
மேலும், உயிரிழந்த எஜமானுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது. பிறகு உயிரிழந்த எஜமானின் உறவினர்களின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறுவது போல தனது சோகத்தை வெளிப்படுத்தியிருந்தது.
இந்தக் காணொளி பார்ப்போரை அழவைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கின்றது.