நெருங்கிய பிரசவ வலி... அடுத்த நொடியே சைக்கில் சென்று குழந்தையை பெற்றெடுத்த பெண்!
நியூசிலாந்து நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பிரசவத்திற்கு தானே சைக்கிளை ஒட்டி சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆன ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த அந்த பெண் எம்பி ஒருவர் இப்படி பிரசவ வலியில் இருந்த போது சைக்கிள் மூலம் மருத்துவமனைக்குச் சென்றதால் சர்வதேசளவில் பல ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிப்போனார்.
வீட்டிலிருந்து சிறிது தொலைவில் தான் மருத்துவமனை என்பதால் அவர் சைக்கிளை தேர்வு செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரசவ வலியுடனே சைக்கிளை ஓட்டி கொண்டு சென்று ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன ஜூலி அன்னேவுக்கு, ஹாஸ்பிடலில் சேர்ந்த 1 மணி நேரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
எம்பி ஜூலி ஆன் ஜென்டர் தனது முதல் குழந்தையான மகனின் பிரவத்தின் போதும் சைக்கிளிலேயே மருத்துவமனைக்கு சென்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது போல பல ருசிகர தகவல்களை சுமந்து இன்றைய வினோத உலகம் காணொளி வெளியாகியுள்ளது.