கணவரிடம் வரதட்சணை வாங்கிய ரம்யா பாண்டியன்... எவ்வளவு வாங்கியிருக்கிறார் தெரியுமா?
சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் தற்போது திருமணத்தில் வழங்கப்பட்ட வரதட்சணையை பற்றி கூறியுள்ளார்.
இந்த தகவல் வெளியான முதல் இந்த காலத்திலும் இப்படி நடக்குமா என்று வியந்து தங்களின் கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியனை அனைவரும் முதன் முதலில் பார்த்தது, கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படத்தில்தான். முன்னாள் தமிழ் திரைப்பட இயக்குநர் துரை பாண்டியனின் செல்ல மகளான இவர், தன் முதல் படத்திலேயே சிறப்பாக நடித்ததற்காக விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றார்.
தயாரிப்பாளரும் நடிகருமான அருண் பாண்டியன் இவரது சித்தப்பா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் முடித்த கீர்த்தி பாண்டியன், இவரது தங்கை முறை உறவினராவார். ரம்யா பாண்டியனை ரசிகர்களிடம் மிகப்பிரபலமாக்கியது இரண்டு சின்னத்திரை நிகழ்ச்சிகள். ஒன்று, குக் வித் கோமாளி. இன்னொன்று, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன்:
நடிகை ரம்யா பாண்டியன், ஜோக்கர் படத்திற்கு பிறகு ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இவர் முக்கிய போட்டியாளராக இருந்தார். மேலும் இந்த போட்டியில் இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தையும் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் இவரை ‘ஆஹா, ஓஹோ’ என புகழ்ந்த மக்கள், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அப்படியே நெகடிவ் ஆக பேசத் தொடங்கினர். இருப்பினும், இந்த சீசனில் அவர் 3வது ரன்னர் அப் பட்டத்தை வாங்கினார்.
ரம்யா பாண்டியன் திருமணம்:
நடிகை ரம்யா பாண்டியன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர் ரிஷிகேஷில் திருமணம் செய்துக்கொண்டார். ரம்யா பாண்டியன் கரம் பிடித்துள்ளவரின் பெயர், லோவல் தவான். ரிஷிக்கேஷை சேர்ந்த இவர், சென்னையில் உள்ள ஒரு யோகா மையத்தில் யோகா பயிற்சியாளராக பணிபுரிந்திருக்கிறார். கற்றுக்கொள்வதற்காக சென்ற ரம்யா பாண்டியனுக்கும், லோவலுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நட்பாக மாறி பின்பு காதலாக மாறியிருக்கிறது. இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நிலையில், இவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர்.
வரதட்சணை வாங்கிய ரம்யா பாண்டியன்:
இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் திருமணத்திற்கு முன் வரதட்சணை வாங்கியதாக சமீபத்தில் ரம்யா பாண்டியனின் அம்மாவே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அவர், திருமணத்திற்கு முன்பே லட்சங்களில் ஒரு பெரிய தொகையை கொடுத்து அதற்கு நகை வாங்கிக்கொள்ளும்படி மாப்பிள்ளை வீட்டில் கூறினார்களாம். அதனால் திருமணத்திற்கு தாங்கள் பெரிதாக எந்த செலவும் செய்யவில்லை என கூறி இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |