திருமணம் செய்யாமல் குழந்தை பெற்ற எமி காதலனை பிரிந்துவிட்டாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் தெறி, தனுஷூடன் தங்கமகன், ரஜினியுடன் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து, வெளிநாட்டு நடிகையான இவர் காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சேர்ந்து வாழ்ந்த ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொண்டார்.
குழந்தை பிறந்து சில வருடங்கள் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் புரிந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலரை எமி ஜாக்சன் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், எமி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து, காதலருடன் இருக்கும் சில புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
இதனால் இந்த குழந்தையின் நிலை என்ன என்ற கேள்வியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.