ஆளே மாறி போன அம்மன் பட சிறுமி: இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
90 காலத்தில் வெளியான அம்மன் படத்தில் குழந்தை அம்மன் பாத்திரத்தில் நடித்த அந்த சிறுமி இப்போ எப்படி இருக்காங்கனு பார்த்து இருக்கீங்களா? அவரின் ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்மன் திரைப்படம்
அன்றைய காலக்கட்டத்தில் சாமி படம் என்றாலே ஒரு மவுசு இருக்கும். அதில் பெயர் போன திரைப்படம் தான் அம்மன். அம்மன் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது ரம்யாகிருஷ்னன்.
இந்த திரைப்படத்தில் சௌந்தர்யா, வடிவுக்கரசி, ராமயா கிருஷ்ணன், சுந்தர் என பலர் நடித்துள்ளனர். இது திகில், அமானுஷ்யம் , சூனியம், அம்மன் சக்தி என பல வடிவத்தில் இந்த திரைப்படம் வெளியானது.
இதில் அம்மனுக்கு குழந்தையாக நடித்த அந்த சிறுமி தற்போது இப்படி தான் இருக்கிறார் என ஒரு புகைப்படம் வெளியாகி இருகிறது.
அம்மன் பட சிறுமி
'பவானி..' என்று குழந்தை குரலில் சௌந்தர்யாவை அழைக்கும் அந்த சிறுமி தான் இவர்.
இவர் அந்த திரைப்படத்தில் மாத்திரமா நடித்தார்? அல்லது இப்போதும் நடித்துக்கொண்டு இருக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும்.
அந்த சிறுமியின் பெயர் பெயர் சுனைனா பாதம். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக 25 படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக 1996 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தார். இதையடுத்து இவர் திரையுலகிலேயே இல்லை எனலாம்.
திருமணத்திற்கு பிறகு ப்ராஸ்டேட்ட வுமன் என்ற வெப் சீரீஸில் நடித்தார். அதையடுத்து ஒரு சில படங்களிலும் வெப் சீரீஸில் நடித்துள்ளார்.
இறுதியாக சமந்தாவின் 'ஓ பேபி', அஜித் நடித்த 'வலிமை' போன்ற படங்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.