அமீர்- பாவனி ரகசிய திருமணம்? வெளியான புகைப்படம்
பிக்பாஸ் ரசிகர்களுக்கு பரிட்சயமான ஜோடி அமீர்- பாவனி, பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீரை பாவனியை உருகி உருகி காதலித்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்த பாவனி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார், சக நடிகரை காதலித்து திருமணம்செய்து கொண்ட பாவனிக்கு கல்யாண வாழ்க்கை நினைத்தபடி அமையவில்லை.
சில மாதங்களிலேயே பாவனியின் கணவர் தற்கொலை செய்து கொண்டுஇறந்து விட்டார், தொடர்ந்து சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பாவனி சீரியல் பக்கம் தலைகாட்டினார்.
ஆனாலும் அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வைத்தது என்னவோ பிக்பாஸ் தான்.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ரீச் ஆன பாவனியை உருகி உருகி காதலிக்கத் தொடங்கினார் அமீர்.
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த போதும் அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார் பாவனி.
ஒருகட்டத்தில் அவரும் ஓகே சொல்ல, இருவரும் லிவிங் டூ கெதரில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவருக்கும் ரகசியதிருமணம் நடந்து முடிந்து விட்டதாக புகைப்படமொன்று வைரலாகி வருகிறது.
ஆனால் அது பாடல் படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |