அமீர் பாவனி இருவரும் பிரிந்துவிட்டார்களா? சர்ச்சைக்கு பதில் இதோ
அமீர் பாவனி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக வெளியான தகவல்களுக்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது.
அமீர் பாவனி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர், அதில் கலந்து கொண்ட பாவனியை காதலித்து வந்தார்.
பாவனி ஏற்கனவே சின்னத்திரை நடிகர் ஒருவரை திருமணம் செய்த நிலையில், திடீரென இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனவருத்தத்தில் இருந்த பாவனி பின்புதான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். அங்கும் சக போட்டியாளர்களுடன் பல சர்ச்சைகளை சந்தித்த பாவனி அமீரின் காதலை ஏற்காமல் இருந்து வந்தார்.
பின்பு பிக்பாஸ் ஜோடி முடிவதற்குள் காதலை அறிவித்தார். துணிவு படத்தில் இருவரும் அஜித் உடன் நடித்திருந்தனர்.
இருவரும் பிரிந்து விட்டார்களா?
சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடிய போது, ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பாவனி ஆம் என்று பதிலளித்தது தற்போது சர்ச்சையினை கிளப்பியுள்ளது.
பாவனியின் இந்த பதிலால் அமீர் உடனான காதல் பிரேக் அப் ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு இருவரும் பிரியவில்லை என்றும் தற்போது வெளியான தகவல் உண்மையல்ல என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |