Viral Video: இந்தியர்களின் ஆங்கிலத்தை பற்றி பேசும் அமெரிக்கப்பெண் என்ன கூறினார்?
புது டெல்லியில் வசிக்கும் அமெரிக்க கண்டெண்ட் கிரியேட்டரான பெண் ஒருவர் ‘இந்தியன் இங்கிலீஷ்’ குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடிளோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
வைரல் வீடியோ
இந்த வீடியோவில் தற்போது ‘இந்தியன் இங்கிலீஷ்’ குறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல் வைரலாகி வருகிறது. வீடியோவில், அவர் இந்தியாவில் இருந்த காலத்தில் கற்றுக்கொண்ட சில அலுவலக ஆங்கில வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களை விளக்கினார்.
அப்படி அவர் கூறும் போது shifting முதல் dry fruits வரை இந்தியாவில் பயன்படுத்தப்படும் அவற்றின் அர்த்தங்கள் வரை சில எடுத்துக்காட்டுகளை வழங்குவதற்கு முன், “ஆங்கிலம் இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றாகும், அது பரவலாக பேசப்படுகிறது.
ஆனால், இந்திய ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாக நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்று பிஷ்ஷர் கூறுகிறார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்குரிய கருத்துக்களை இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |