அம்பானி விசேஷத்திற்கு வந்த அமெரிக்கா மொடல் செய்த செயல்- இந்தியாவை என்ன சொல்லிருக்கார்?
அம்பானி வீட்டு திருமண விழாவிற்கு வந்த அமெரிக்கா மொடல் கிம் கர்தாஷியனின் இந்தியா குறித்தான பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆனந்த் அம்பானி- ராதிகா
ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி பார்க்கப்படுகிறார். இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர்களின் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
2 ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகளை தொடர்ந்து திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இவர்களின் புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளிப்பு
இந்த நிலையில், மும்பை- ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க மொடல் அழகி கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி க்ளோ கர்தாஷியனுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்காக இந்தியா வந்த அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் மும்பை- இஸ்கான் கோவிலுக்கு சென்று ஆரத்தி வழிபாடு செய்துள்ளார்.
பின்னர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அளித்துள்ளார்.
இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதில் "இந்தியா எனது இதயத்தை கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |