பிரபல நடிகரின் ரசிகர்கள் திரையரங்கை விட்டு திடீர் வெளியேற்றம்! என்ன காரணம் தெரியுமா?
அமெரிக்காவிலுள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் பேப்பர்களை கிழித்தெறிந்து ரணகளம் செய்த ரசிகர்களை திரையரங்க நிர்வாகத்தினர் வெளியில் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.
பிரமாண்டமாக திரைக்கு வந்த திரைப்படங்கள்
நேற்றைய தினம் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு, துணிவு என இரண்டு திரைப்படங்கள் வெளியானது.
இதன்போது தல மற்றும் தளபதி ரசிகர்கள் ஆரவாரத்துடன் இரண்டு திரைப்படங்களையும் ரிலிஸ் செய்துள்ளார்கள்.
இதனால் இரண்டு உயிர்சேதங்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் அமெரிக்காவை சேர்ந்த பிரபல திரையரங்கு ஒன்றில் நடிகர் Balayya நடித்த திரைப்படம் வெளியிடப்பட்டது.

ஆரவாரத்தில் ஈடுப்பட்ட ரசிகர்கள் அதிரடியாக வெளியேற்றம்
இதன்போது ரசிகர்கள் பேப்பரை கிழித்து ஆரவாரத்துடன் படத்தை பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.
இவ்வாறு செய்வதால் திரையரங்கம் அழுக்காக மாறும் என்பதால் திரைப்படத்தை பாதியில் நிறுத்தி விட்டு அனைத்து ரசிகர்களையும் திரையரங்கு நிர்வாகத்தினர் வெளியில் அனுப்பியுள்ளார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியை ரசிகர்களில் ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கம் பகிர்ந்துள்ளார்.
Balayya fans USA sambhavam ?pic.twitter.com/REuNoyIbBt
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 12, 2023