பிரைவேட் ஜெட், சொகுசு கார்கள்- ப்ரீ வெட்டிங் விழாவில் தடபுடலாக கவனிப்பு கொடுத்த அம்பானி
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரபலங்களை அம்பானி தடபுடலாக கவனித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனந்த் அம்பானி
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் 2-வது ப்ரீ வெட்டின் நேற்றைய தினம் நடந்து முடிந்த நிலையில் இது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இத்தாலியில் தொடங்கிய 2-வது ப்ரீ வெட்டின் கொண்டாட்டம் நேற்று பிரான்சில் நிறைவடைந்துள்ளது. இதில் பல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு அம்பானி குடும்பத்தினர் உயர்மட்ட கவனிப்பை கொடுத்தாகவும் கூறப்படுகின்றது.
உயர்மட்ட கவனிப்புக்கள்
கடந்த மே 28, 2024 திகதி 10 விமானங்கள் பாலிவுட் பிரபலங்களை ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவிற்கு அழைத்து சென்றன.
ஏனெனில் உலகத்திலுள்ள அனைத்து பிரபலங்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால் அவர்களை அழைத்து வருவதற்கான விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
மேலும் குடும்ப உறுப்பினர்கள், வணிகப் பங்காளிகள், நண்பர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் நிகழ்வு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு தனியாக 12 தனியார் விமானங்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விமான பயணத்தை முடித்த பிரபலங்கள் குறித்த இடத்திற்கு அழைத்து வருவதற்காக சுமார் 150 உயர்தர கார்கள் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீஸ், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய சொசு கார்கள் குறிப்பிடலாம்.
திருமணம்
அத்துடன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் இந்திய பாரம்பரிய உணவுகள் முதல் சர்வதேச உணவு வகைகள் வரை வைக்கப்பட்டுள்ளன.
கப்பலில் உள்ள அரங்குகள் அதிநவீன ஒலி மற்றும் ஒளி அமைப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்தாகவும் கூறப்படுகின்றது.
அம்பானி தனது இளைய மகனின் ப்ரீ வெட்டிங் நிகழ்வுகளை இவ்வளவு சிறப்பாக மே 29 முதல் ஜூன் 1, 2024 வரை ஸ்பெயினில் ஒரு ஆடம்பரமான உல்லாசப் பயணக் கப்பலில் செய்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் ஆனந்த - ராதிகா திருமணம் ஜூலை 12, 2024 அன்று நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |