அம்பானி குடும்பத்தினர் மேக்கப் போட எவ்வளவு செலவழிப்பாங்க தெரியுமா?
இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி எப்போதும் தன்னை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பார்.
அவரின் மனைவி நீதா அம்பானி வெளியில் வரும் போது அவர் அணிந்திருக்கும் ஆடைகள் புதுவிதமாகவும், விலைமதிப்பாகவும் இருக்கும்.
இவர்களின் அழகிய தோற்றத்திற்குப் பின்னால் மிக்கி கான்ட்ராக்டர் என்ற ஒப்பனைக் கலைஞர் இருக்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மிக்கி, நீதா அம்பானி, இஷா அம்பானி, ஷ்லோக் மேத்தா உள்ளிட்ட பலருக்கு ஒப்பனை செய்து வருவதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் இது தொடர்பான மேலதிக விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அம்பானி குடும்பத்தினர்
இந்திய கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானியின் மற்றும் நீதா அம்பானி இருவரும் வணிகத்தில் மிகவும் பிரபலமான நபர்களாக இருந்து வருகிறார்கள். 59 வயதாகும், நீதா அம்பானி எப்பொழுதும் அழகாக வைத்துக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்.
இவர், ஆன்-பாயிண்ட் மேக்கப் மூலம் அவர் மேலும் பிரகாசமாகத் தெரிகிறார். நீதா அம்பானியின் இந்த அழகிற்கு பின்னால் மிக்கி காண்ட்ராக்டர் என்ற ஒப்பனையாளர் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
மிக்கி காண்ட்ராக்டர்
மிக்கி காண்ட்ராக்டர் என்பவர் கடந்த 30 வருடங்களாக மிக சிறந்த ஒப்பனையாளர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். அனைத்து பாலிவுட் பிரபலங்களுக்கு விரும்பப்படும் ஒரு ஒப்பனைக் கலைஞராக ஒள்ளார்.
திரைப்படங்களிலும் வரும் சில பிரபலங்களுக்கும் இவர் தான் ஒப்பனை செய்வாராம்.
அந்த வரிசையில், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, மகள் இஷா அம்பானி மற்றும் மருமகள் ஷ்லோக் மேத்தா ஆகியோருக்கும் மிக்கி கன்ட்ராக்டர் தான் ஒப்பனையாளராக இருந்து வருகிறார்.
இவர் ஒரு அமர்வுக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த மேக்கப் கலைஞர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |