கணவருடன் நெருக்கமாக இருக்கும் அமலா பால்- விமர்சகர்களை கடுப்பாக்கிய அழகு பார்க்கும் காட்சி!
அமலாபால் கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்காட்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விமர்சகர்களை கடுப்பாக்கியுள்ளார்.
அமலா பால்
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அமலா பால்.
இவர் நடிப்பில் வெளியான வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்கள் சரியான ஒரு இடத்தை உருவாக்கி தராவிட்டாலும் அதன் பிறகு வெளியான “மைனா” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் அமலாபால் 2014-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.
கணவருடன் நெருக்கம் காட்டும் காட்சி
விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
விவாகரத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் பல சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்து சினிமாவிலிருந்து முற்றாக விலகி இருந்தார்.
திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய இரண்டாவது காதலரை அறிமுகம் செய்தார்.
அறிமுகம் செய்து சில நாட்களில் திருமணமும் செய்து கொண்டார்.
திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்காட்சியை பகிர்ந்துள்ளார்.
அமலாபால் மீது பல சர்ச்சைகளை கிளப்பிய பல விமர்சகர்களுக்கு இது அடியாக இருக்கும் என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |