மகனுடன் ஆல்யா மானசா செய்த வேலையை பாருங்க... படு வைரலாகும் காணொளி!
சீரியல் நடிகை ஆல்யா மானசா தனது செல்ல மகனுடன் ட்ரெண்டிங் பாடலுக்கு அசத்தலாக ரயாக்ஷன் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான வலம் வருபவர் தான் ஆல்யா மானசா. இவரைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது. இல்லதரசிகள் பலருக்கும் பிடித்த ஹீரோயினாக திகழ்ந்து வருகின்றார்.

நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் நாயகியாக களமிறங்கியவர் பின் ராஜா ராணி 2, இனியா போன்ற தொடர்களில் நடித்து தற்போது பீக்கில் இருக்கின்றார்.

ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

படடிப்பிடிப்பில் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும், குழந்தைகளுடன் , தனது காதல் கணவருடனும் நேரம் செலவிடுவதற்கு இவர் தவறுவதே கிடையாது.

இந்நிலையில், ஆல்யா தனது மகனுடன் ட்ரெண்டிங் பாடலுக்கு ரீல்ஸ் செய்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருவருடன் அசுர வேகத்தில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |