பலவிதமான நன்மைகளை தரும் கற்றாழை சுவீட் - செய்வது எப்படி?
கற்றாழையானது உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. அந்த வகையில் சருமத்தை பொலிவாக்க சுவையான கற்றாழை ஸ்வீட் எவ்வாறு செய்யலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஏலக்காய் -4 நெய் -3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை -5 டேபிள்ஸ்பூன் பால் -1 லிட்டர் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட கிரீம் - 4 டேபிள்ஸ்பூன் பாதாம், பிஸ்தா -2 டேபிள் ஸ்பூன் தோல்நீக்கி அலசப்பட்ட கற்றாழை ஜெல் -4 டேபிள் ஸ்பூன்
செய்முறை விளக்கம்
ஒரு கிண்ணத்தில் சர்க்கரையை கொட்டி, அது பொன்னிறமாக மாறும்வரை அடுப்பில் வைத்து பாகுபதத்தில் காய்ச்ச வேண்டும்.
அதன்பின் ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை, அரை லிட்டராக சுண்டும் வரை மிதமான தீயில் நன்கு காய்ச்ச வேண்டும்.
அதனுடன் கற்றாழை போட்டு 10 நிமிடங்கள் கிளற வேண்டும். தொடர்ந்து, இந்த கலவையை கிரீம் பதத்திற்கு வரும் வரை கிளறி, பின் அதனுடன் பாலில் தயாரிக்கப்பட்ட கிரீம் சேர்க்க வேண்டும்.
அப்போ பால் லேசாக பொன்னிறமாக மாற தொடங்கும் நிலையில், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும்.
தொடர்ந்து, இந்த கலவையை ஒரு அகன்ற பாத்திரத்தில், ஒரு கப் நெய் சேர்த்து கொட்டி ஆற வைக்க வேண்டும்.
ஆறியபின் உங்களுக்கு பிடித்த வடிவங்களில் வெட்டி, அதன் மேல் பிஸ்தாவை போட்டு குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து உண்டால், சூப்பரான கற்றாழை ஸ்வீட் ரெடியாகி விடும்.