இளம் வயதிலேயே முதுமை தோற்றமா? அப்போ இந்த கற்றாழை வைத்தியம் உங்களுக்காக..
பொதுவாக பெண்கள் தற்கால் பெண்கள் டயட் காரணமாக தங்களின் உடம்பை அவர்களே வறுத்திக் கொள்கிறார்கள்.
இதன்படி, நாம் முகத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் இயற்கை பொருட்களில் கற்றாழையும் ஒன்று.
சருமம் சுருக்கமாக இருக்கும் பொழுது வைட்டமின்கள் பொருந்திய சில பேக்களை முகத்தில் போடும் போது இறந்த செல்கள் அகன்று புதிய செல்கள் வளர ஆரம்பிக்கும்.
இதனால் வெளியிலிருந்து பார்ப்பதற்கு முகமும் அழகாக மாறும். அந்த வகையில் கற்றாழையை எப்படி பேக்காக முகத்திற்கு பயன்படுத்துவது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல் - ஒரு தேக்கரண்டி
- ஓட்ஸ் - ஒரு தேக்கரண்டி
- ஆலிவ் ஆயில் - அரைக்கரண்டி
செய்முறை
முதலில் கற்றாழை ஜெல், ஓட்ஸ், ஆலிவ் ஆயில் ஆகிய மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
பின்னர் கைகள் அல்லது கரண்டியை பயன்படுத்தி மூன்றையும் கலந்து கொள்ளவும்.
முகத்திற்கு தடவ தயாரான பதத்தில் பேக் இருக்கும் பொழுது முகத்தை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவி விட வேண்டும்.
காட்டன் துணியால் முகத்தை துடைத்து விட்டு பேக்கை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
இப்படி வாரத்திற்கு இரண்டு முறையாவது செய்து வந்தால் முகம் பொலிவடையும்.
அத்துடன் பேக்கை முகத்திலிருந்து இல்லாமாக்கிய பின்னர் முகத்திற்கு ஏதுவும் போடாமல் இருப்பது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |