வறண்ட சருமம், முகத்தில் ஏகப்பட்ட பள்ளங்கள்; ஒரே இரவில் கற்றாழை ஜெல் செய்யும் அற்புதம்
பொதுவாக சிலரின் முகத்தில் பருக்களால் ஏகப்பட்ட பள்ளங்கள் உண்டாகி இருக்கும். அப்படியானவர்கள் என்ன செய்வது என தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
இது போன்ற சரும பிரச்சினைகள் முகத்திற்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் ஈரப்பதன் குறைபாட்டால் ஏற்படுகின்றன. முகத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு மருந்தாக கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகின்றது. இதுவே பல சரும மருத்துவர்களின் சிபாரிசாகவும் உள்ளது.
இரவு நேரம் படுக்கைக்கு செல்லும் முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி வந்தால் சருமம் பளபளப்பாகவும், ஈரப்பதம் நிறைந்ததாகவும் மாறுகின்றது.
கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் வறண்டு காணப்படும் சருமத்திற்கு ஈரப்பதனை வழங்குகின்றது. அத்துடன் முகத்தில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்கிறது.
இவ்வளவு பலன்களை கேட்காமலேயே நமக்கும் வழங்கும் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
இரவு கற்றாழை ஜெல் தடவினால் என்ன பலன்?
1. தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்தில் பூசி வந்தால் இயற்கையான நீர்ச்சத்து சருமத்திற்கு கிடைக்கும். அத்துடன் அதிலிருக்கும் சத்துக்கள் எண்ணெய் சருமம், வறண்ட சருமம் உள்ளிட்ட அனைத்து சருமத்திற்கு ஏற்ற வகையில் பலன்களை தரும்.
2. கற்றாழை ஜெல்லை பயன்படுத்தும் பொழுது வீக்கங்கள் குறையும். அதே சமயம், சிலருக்கு முகத்தில் அழற்சிகள் வந்திருக்கும். அப்படியானவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது. உதாரணமாக, எரிச்சல், அரிப்பு, சூரியனால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கிறது.
3. “ஹையாலுரானிக்” எனப்படும் அமிலம் கற்றாழையில் அதிகம் உள்ளது. இது சருத்தில் கொலாஜென் உற்பத்தி தூண்டி முகப்பருக்களை இல்லாமல் செய்கிறது. இதனால் சருமம் பார்ப்பதற்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.
4. கற்றாழையில் உள்ள பாலி சாச்சரைட்கள், சருமத்தில் உள்ள காயங்கள் மற்றும் மீட்டுருவாக்கத்தை அதிகரிக்கிறது. முகப்பருக்களால் ஏற்படும் பள்ளங்களை தடம் தெரியாமல் மறைக்கிறது. அத்துடன் “எக்சைமா”எனப்படும் சரும நோயை குணப்படுத்தும் ஆற்றலும் உள்ளதாக கூறப்படுகின்றது.
5. சிலருக்கு என்ன வைத்தியம் செய்தாலும் முகப்பருக்கள் குறையாமல் அப்படியே இருக்கும். அப்படியானவர்கள் இரவு தூங்குவதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவிக் கொள்ளலாம். இது பாக்டீரியாக்களை அழித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். எனவே கற்றாழை ஜெல்லை முகத்தில் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |