பாக்டீரியா தொற்றுகளுக்கு மருந்தாகும் Almox 500
நம் உடலை தாக்கும் பல்வேறு வகையான பக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகிறது Almox 500.
தொண்டை மற்றும் காதில் தொற்று, சைனஸ், நிமோனியா போன்ற சுவாச கோளாறு பிரச்சனைகள், சிறுநீர் பாதை தொற்று, டைபாய்டு காய்ச்சல் போன்றவற்றிற்கு மருந்தாகிறது.
பெப்டிக் அல்சர் நோயாளிகளின் உடலில் இருந்து H. pylori பக்டீரியாக்களின் வெளியேற்றத்திற்கும் உதவுகிறது.
குறிப்பாக பக்டீரியாக்களின் அதீத வளர்ச்சியை தடுப்பதால் நோயை குணமாக்குகிறது.
ரத்தம், மூளை, நுரையீரல், எலும்பு, மூட்டுகள், வயிறு, குடல் மற்றும் சிறுநீர் பாதையில் பக்டீரியா தொற்றுகளையும் குணமாக்குகிறது.
உணவுடன் சேர்த்து Almox 500 மாத்திரைகளை எடுத்துக்கொள்வது பலனை தரும். மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்ந்தோ அல்லது இடைவெளிவிட்டோ Almox 500 மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
உங்களுக்கான தொந்தரவுகள் சரிஆனாலும் மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுகளில் தவறாமல் எடுத்துக் கொள்ளவும், முன்னதாகவே சுயமாக நிறுத்துவது நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம்.
உங்களது தொற்றை பொறுத்தே மருத்துவர் மருந்துகளை பரிந்துரைப்பார், சுயமாக எடுத்துக் கொள்வது ஆபத்தை உண்டு பண்ணலாம்.
பெனிசிலின் மருந்து அலர்ஜி இருந்தால் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
பக்கவிளைவுகள்
வாந்தி
அலர்ஜி
குமட்டல்
வயிற்றுப்போக்கு
பெரும்பாலான நபர்களுக்கு இது தற்காலிகமானதே, தொந்தரவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
கர்ப்பிணிகளுக்கு Almox 500 பாதுகாப்பானது என்றாலும் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது நல்லது.
சிறுநீரக மற்றும் கல்லீரல் நோயாளிகளுக்கு பாதுகாப்பானது அல்ல, மருத்துவரின் முறையான ஆலோசனைப்படியே மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது மருத்துவரிடம் உங்கள் உடல்நிலை குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |