வாடகை வீட்டிற்கு மாறிய பிரபல நடிகர் - ஒரு மாத வாடகை எவ்வளவு தெரியுமா?
பிரபல நடிகர் அல்லு அர்ஜீன் தனக்கு 100 கோடி ரூபாயில் சொந்தமாக வீடு இருந்தும் தற்போது வாடகை வீட்டில் தங்கி உள்ளார்.

அல்லு அர்ஜுன்
சாதாரண தெலுங்கு நடிகராக இருந்த அல்லு அர்ஜுன் புஷ்பா வெற்றியால் பான் இந்திய ஸ்டாரானதுடன் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறியுள்ளார்.
அட்லியுடனான படத்தில் ரூ. 400 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.

அண்மையில், ஹைதராபாத்தில் அல்லு சினிமாஸ் என்கிற பெயரில் மிகப்பெரிய திரையரங்கத்தையும் கட்டினார். இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தன் குடும்பத்தினருடன் மும்பைக்குக் குடியேற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லி இயக்கத்தில் நடிக்கும் ராக்கா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 800 கோடி உனப்படுகின்றது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். ,ந்த நிலையில் இல்லு அர்ஜீன் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து்ளாராம்.

வாடகை வீடு
இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் அதிகமாக இடம்பெற இருப்பதால் மும்பையின் ஜூஹு தாரா சாலையில் 5BHK அப்பார்ட்மென்ட் ஒன்றை அல்லு அர்ஜுன் வாடகைக்கு எடுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
மூன்று வருட லீஸ் ஒப்பந்தம் போட்டுள்ள அவர், மாதத்திற்கு 16 லட்ச ரூபாய் வாடகை கொடுக்கிறாராம்.

இந்த அபாட்மென்ட் 6,000 சதுர அடியில் அமைந்துள்ளது. இதில் ஒரு சிறிய நீச்சல் குளம் மற்றும் நான்கு கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் உள்ளது.