82 வயதில் தந்தையானார் ஆஸ்கர் விருது நாயகன்
ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் அல்பசீனோ தன்னுடைய 82வது வயதில் 4வது முறையாக தந்தையாகியுள்ளார்.
82 வயதில் தந்தையான அல்பசீனோ
ஹாலிவுட் திரையுலகில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்பசீனோ. காட் ஃபாதர், ஸ்கர்போல் உட்பட பல படங்களில் நடித்து ஆஸ்கார் விருது பெற்றுள்ளார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர்.
இதனையடுத்து, 29 வயது படத் தயாரிப்பாளருமான நூர் அல்ஃபலா என்பவருடன் நடிகர் அல்பசீனோவிற்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. காதலி நூல் அல்ஃபலாவுடன் 2022ம் ஆண்டு முதல் ஒன்றாக வாழ்ந்து வந்தார் அல்பசீனோ.
இந்நிலையில் நூல் அல்ஃபலா தற்போது கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வயதான காலத்தில் தந்தையாகியுள்ள அல்பசீனோவை கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.