புதன்-சுக்கிரனால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி!
ஜோதிட ரீதியில் நவகிரங்களின் பெயர்ச்சி மற்றும் முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகங்கள் என்பன 12ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்க செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், மே மாதத்தின் இறுதியில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் இணைவதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகின்றது.

அழகு ஆரம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் மற்றும் புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணியாக புதன் ஆகிய முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் இந்த அரிய ராஜ யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும்.
இருப்பினும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் தொழில் மற்றும் பொருளாதார ரீதிஜயில் உச்ச அளவில் சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாவதால், இவர்களின் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் வெற்றி கிடைக்கும்.
புதன் ஆசியால் மனதில் தெளிவும், சுக்கிரன் ஆசியால் வருமானத்தில் உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி விடயத்தில் பெரியளவில் ஏற்றம் உண்டாகும்.
புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலம் போராடி வந்தவர்களுக்கு இந்த காலகட்டம் அதற்கான வாய்ப்புகளை கைக்கு மேல் கொண்டு வந்து சேர்க்கும்.
துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளதால், இவர்களின் பொருளாதார நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் காணும். நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கிட்டும்.
வருமானத்துக்கான புதிய வழிகள் திறக்கும். இதனால் குடும்பத்திலும் சமூகத்திலும் இவர்களுக்கான மதிப்பும், மரியாதையும் உயரும்.
திருமண வாழ்க்கையில் நீ்ண்ட காலம் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி கணவன் மனைவியிடையே சுக்கிரனின் ஆசியால் காதல் அதிகரிக்கும்.
கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளதால், இவர்களின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி. புதிய தொழில் முயற்சிகள் எதிர்பாராத அளவுக்கு லாபத்தை கொடுக்கும்.
பணியிடத்தில் சக ஊழியர்களிடம் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி அமைதியாக சூழல் உருவாகும். சுக்கிரன் ஆசியால் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை எதிர்ப்பார்களாம்.
இவர்களின் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன்களை லட்சுமி நாராயண ராஜயோகம் கெடுக்கப்போகின்றது.பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |