பலமடங்கு பெருகும் தங்கம்! அட்சய திருதியை நாளில் எந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்?
இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் அட்சய திருதியை... இந்த நாளில் நாம் செய்யும் சில தவறுகள் பொருளாதார சரிவை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அட்சய திருதியை
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அது பலுகி பெருகும் என்பது ஐதீகம். 2023ம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 23ம் தேதி ஞாயிற்றுகிழமை வருகிறது.
ஏப்ரல் 22ம் தேதியே காலை 09.18 மணிவாக்கில் திதி தொடங்கிவிடும். மறுநாள் காலை 09.27 மணி வரை மட்டுமே அட்சய திருதியை திதி இருக்கும்.
அட்சய திருதியை அன்று செல்வத்தின் தெய்வமான மகாலக்ஷ்மியையும், மகா விஷ்ணுவையும் வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
எந்த நேரத்தில் தங்கம், வெள்ளி வாங்கலாம்?
சித்திரை 9 (ஏப்ரல் 22)ல் அட்ஷய திருதியை என்று குரு ஓரை காலமான காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையிலும் தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்கலாம்.
சுக்கிர ஓரை காலமான காலை 10-11, மாலை 5-6 மணி வரையிலும் தங்கம், வெள்ளி வாங்கலாம். சித்திரை 10 (ஏப்ரல் 23)ல் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், பின்னர் 11 மணி முதல் 12 மணி வரையிலும் தங்கம், வெள்ளி பொருட்கள், நகைகள் வாங்கலாம்.