அட்சய திருதியை அன்று குபேர யோகம் பெறும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?
இந்துமதத்தின் பிரகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் மங்களகரமான நாளகவும் அறியப்படும் அட்சய திருதியையில் வாங்கும் பொருட்கள் பல மடங்கு பெருக்கத்தை கொடுக்கும் என்பது ஐதீகம்.
அட்சய என்றால் குறைவில்லாத என்று பொருள். செல்வச் செழிப்பை அள்ளித் தரும் தினமான அட்சய திருதியை இந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி வருகின்றது.

இந்த ஆண்டு அட்சய திருதியையின்போது மேஷத்தில் சூரியனும் ரிஷபத்தில் சந்திரனும் வளமான நிலையில் இருப்பதால் குபேர யோகம் உருவாகவுள்ளது.
அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்த 3 ராசிகளுக்கு மிகப்பெரும் முன்னேற்றத்தையும் அதிர்ஷ்ட பலன்களையும் கொடுக்கப்போகின்றது.
மேஷம்

இந்த ஆண்டு அட்சய திருதியையில் உருவாகும் குபேர யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கபோகின்றது.
இதுவரையில் இவர்களின் வாழ்வில் இருந்துவந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி சுபீட்சமான சூழல் தானாகவே உருவாகும்.
தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய பதவியில் அமர்வதற்கான வாய்ப்புகள் கைகூடிவரும். தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யும் யோகம் காணப்படுகின்றது.
ரிஷபம்

ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெற்று இருப்பதாலும் சுக்கிரனின் ஆதிக்கம் இருப்பதாலும் அட்சய திருதியை இந்த ராசிக்கு நிதி ரீதியில் அதி உச்ச பலன்களை கொடுக்கப்போகின்றது.
இந்த காலகட்டத்தில் இவர்கள் தொட்தெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் காணப்படுகின்றது. சூரியன் ஆசியால் தங்கம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்கி உறவுகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கூடி வரும்.
சிம்மம்

அட்சய திருதியை சிம்ம ராசிக்காரர்களுக்கு அமோகமான முன்னேற்றத்தை கொடுக்கப்போகின்றது.
இவர்களின் தொழில் வாழ்க்கையில் இதுவரையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி பணியிடத்தில் மரியாதையும் பாராட்டுக்களும் கிடைக்கும்.
புதிய தொழிலை ஆரம்பிக்க காத்திருப்போருக்கு இது ஒரு அமோகமான காலகட்டமாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வதற்காக வாய்ப்புகள் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |