மெழுகு சிலையாக அஜித்தின் மகள்! அம்மா ஷாலினியை மிஞ்சிய அழகு
நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா அம்மா ஷாலினியை மிஞ்சும் அழகில் காணப்படும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
அஜித் ஷாலினி தம்பதிகள்
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் அஜித் ஷாலினி இருவரும் அமர்களம் படத்தில் நடித்ததன் மூலம் பின்பு காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களை நடித்து பின்பு மலையாளத்தில் வெளியான அனியாத பிறவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியானார்.
தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு, அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன.
2009 ம் ஆண்டு அஜித்தைக் காதலித்து வந்த இவர், அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களை நடித்த முடித்த பின்பு திருமணம் செய்து கொண்டார்.
பின்பு இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற குழந்தைகள் உள்ளனர். நடிகர் அஜித் தற்போது வரை உச்ச நடிகராக வலம்வருகின்றார்.
திருமணத்திற்கு பின்பு குடும்பம், பிள்ளைகள் என்று வாழ்ந்துவரும் ஷாலினி, சில நிகழ்ச்சிக்கு தங்கள் குழந்தைகளுடன் செல்லும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
ஷாலினியை மிஞ்சிய மகள்
இந்நிலையில், அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி ஓவிய கண்காட்சிக்கு ஷாலினி தனது மகளுடன் வந்துள்ளார். நடிகை ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஓய் என்ற படத்தில் நடித்திருந்தார்.
பின்பு சினிமா வாய்ப்புகள் அதிகமாக கிடைக்காததால் தனது ஓவியத் திறமையினை வெளிக்காட்டி வருகின்றார். சமீபத்தில் துபாயில் ‘வேர்ல்ட் ஆர்ட் துபாய்’ என்ற சர்வதேச ஓவியக் கலைக்கூடத்தில் தன்னுடைய ஓவியத்தையும் வைத்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தனது ஓவியத்தில் பெண்களை மையமாகவே வைத்து காட்சிபடுத்தி வருகின்றார். இந்த ஓவியக் கண்காட்சியை சிறப்பிக்க ஷாலினி தனது மகளுடன் வந்துள்ளார்.
ஷாலினி மற்றும் ஷாமிலிக்கே டஃப் கொடுக்கும் விதமாக மெழுகு சிலையாக அஜித்தின் மகள் நிற்கும் புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
அதுமட்டுமின்றி அடுத்த கதாநாயகியாக வருவாரா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வியும் எழுப்பி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |