இந்த அஜித் பட நடிகை ஒரு டாக்டராம்... இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க
பெங்காலி மொழியில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை துவங்கிவர் தான் நடிகை பிரியங்கா. இப்பொது இவருக்கு வயது 46.
நடிகை பிரியங்கா
எழில் இயக்கத்தில் 2002ம் ஆண்டு அஜித், ஜோதிகா, பிரியங்கா, வடிவேலு, சோனு சூத் என பலர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் ராஜா.
இந்த படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களிடம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா. 1998ம் ஆண்டு பெங்காலி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார்.
2002ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்த இவர் அடுத்து ராஜா படத்தில் நடித்தார்.
பின் சில படங்களில் நடித்துவந்த இவர் பட வாய்ப்புகள் குறைந்ததால் கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டார்.
இப்போது இவருக்கு ஐஸ்வர்யா உபேந்திரா மற்றும் ஆயுஷ் உபேந்திரா என்கின்ற ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர் இப்பொழுது ஒரு டாக்டராகவும் பணியாற்றி வருவதாக கூறபடுகிறது.
இவருடைய இன்ஸ்டா பக்கத்திலும் கூட டாக்டர் பிரியங்கா உபேந்திரா என்றே குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தோடு இணைந்து தனது காலத்தை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்தோடு எடுத்துக் கொண்டு புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |