அதிவேக சொகுசு காரில் நடிகர் அஜித்... ஒரு காரின் விலை மட்டும் இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள்
ஐரோப்பாவில் நடிகர் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று.
அது போல் தனது BMW பைக்கை எடுத்துக்கொண்டு தல அஜித் ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பைக் பயணத்திற்கு நடுவே அஜித், இங்கிலாந்தில் உள்ள மெக்லாரன் கார் ஷோரூமுக்கு சென்று அங்குள்ள கார்களை பார்வையிட்டுள்ளார்.
மெக்லாரன் காரின் விலை
மெக்லாரன் நிறுவனம் பார்முலா கார் பந்தயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனம் ஆகும். நடிகர் அஜித், மெக்லாரன் 2018 720S காரின் அருகில் நிற்கும் புகைப்படமும் வெளியாகி உள்ளது.
இந்த கார் இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் ஆகும்.
அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அஜித் அருகில் இருக்கும் காரின் விலையை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.