இதையெல்லாம் செய்யாதீங்க... அஜித் சார் எனக்கு அட்வைஸ் செய்தார்... - சூரி ஓபன் டாக்!
இதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு அஜித் சார் அட்வைஸ் செய்தார் என்று நகைச்சுவை நடிகர் சூரி மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.
ஒரு டெக்ஸ்டைல் தொழிலில் வேலை பார்த்து வந்த அஜித்தின் அழகைப் பார்த்து நண்பர்கள் மாடலிங் துறையில் முயற்சி செய் என்று ஊக்கப்படுத்த, நடிகர் அஜித் மாடலிங் துறையில் நுழைந்தார். மாடலிங் துறையில் நுழைந்த அஜித்திற்கு தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனையடுத்து, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அஜித்திற்கு குவியத் தொடங்கின. கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து இன்று புகழின் உச்சிக்கே சென்றுள்ளார் நடிகர் அஜித்.
சூரிக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்
இந்நிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு நகைச்சுவை நடிகர் சூரி பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில், அஜித் சார் எனக்கு அட்வைஸ் செய்தார். அடுத்தவங்க நம்மைப் பற்றி என்ன பேசினாலும் அதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். அதேபோல் நம்மைப் பற்றி விமர்சனங்கள் வந்தாலும் கூட அதை தலையில் ஏற்றிக்கொள்ள கூடாது.
முதலில் நம்மை நாம் நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் நம்மை நேசிப்பார்கள். நம்பிக்கையுடன் இருங்கள் என்று அஜித் தனக்கு அட்வைஸ் செய்ததாக தெரிவித்தார்.