மானமே போகுது... ரசிகர்களின் செயலால் கோபமடைந்த அஜித்! வைரலாகும் காணொளி
அபுதாபியின் புகழ்பெற்ற யாஸ் மரினா சர்க்யூட்டில் அஜித்தைச் சந்திக்க சென்ற ரசிகர்களின் பொறுப்பற்ற செயல் குறித்து, மானதே போகுது... என சுட்டிக்காட்டி பேசிய அஜித்தின் காணொளி தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார்
90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகர் தான் அஜித்குமார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்களில் ஒருவர்.

இவரை தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருவகின்றனர். அஜித் நடிப்பில் இதுவரையில் 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் இறுதியாக "குட் பேட் அக்லி" (Good Bad Ugly) திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அஜித் நடிக்கும் 64வது திரைப்படத்திற்கு AK 64 என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார், மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.இத்திரைப்பத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித் ஆதங்கம்
இந்நிலையில், நடிகர் அஜித் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.அவரை பல பிரபலங்களும். ரசிகர்களும் நேரில் சென்று சந்தித்து வருகின்றனர்.
அஜித் ரசிகர்களால், கார் பந்தயம் குறித்த தகவல்களும் பரவலாக இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

தன் குழுவினருடன் அஜித் தினமும் நீண்ட நேரம் பயிற்சியில் இருப்பதால் அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகை தந்தாலும், அதற்காக நேரம் ஒதுக்கி அஜித்தும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.
ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை கார் பந்தய சாலை பகுதிக்குச் சென்ற ரசிகர்களில் சிலர் விலை மதிப்புமிக்க பந்தய கார்களில் ஏறி அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும், குடி போதையில் வந்த சிலரும் கத்தி, கூச்சல் போட்டபடி பிற வெளிநாட்டு வீரர்களின் கார்களை சூழ்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த நடிகர் அஜித் அந்த ரசிகர்களிடம், “தயவு செய்து பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள். இது திரையரங்கம் கிடையாது. நம்ம மானமே போகுது.” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |