‘வேண்டாம் சார்... லக்கேஜ் நானே எடுத்துட்டு வரேன்..’ - அஜித்தின் வீடியோ வைரல்
‘வேண்டாம் சார்... லக்கேஜ் நானே எடுத்துட்டு வரேன்..’ என்று கூறிய அஜித்தின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் போராடி முன்னுக்கு வந்தவர் அஜித். இவர் 10ம் வகுப்புக்கு மேல் படிக்கவே இல்லை. இதனையடுத்து, டெக்ஸ்டைல் தொழிலில் நுழைந்தவர்.
நண்பர்கள் வற்புறுத்தியதால் மாடலிங்கில் நுழைந்தார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பைக் மற்றும் கார் ஓட்டுவதில் நடிகர் அஜித் அதிக ஆர்வம் கொண்டவர். பல ரேஸ்களிலும் கலந்து கொண்டுள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையையும் படைத்துள்ளது.
அஜித் தந்தை மரணம்
சமீபத்தில் அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் உயிரிழந்தார். அஜித்தின் தந்தை மறைவிற்கு, சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
அஜித்தின் வீடியோ வைரல்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விமான நிலையத்திற்கு வந்த அஜித்குமார் ரொம்ப பளுவான லக்கேஜை கையில் எடுத்துக் கொண்டு வந்தார்.
அப்போது, விமான நிலைய ஊழியர் ஒருவர் சார்.. கொடுங்க.. உங்க லக்கேஜ் நான் எடுத்துட்டு வரேன்.. என்று கூறினார். உடனே அஜித்குமார் இல்ல... சார்.. நானே எடுத்துட்டு வரேன்... என்று பெருந்தன்மையோடு கூறி எடுத்துக்கொண்டு சென்றார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அஜித் ரசிகர்கள் என் தலைவனுக்கு எவ்வளவு பெருந்தன்மை என்று கூறி லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
Recent video #AjithKumar sir At Chennai airport ????#AjithKumar || #Ak62 || #thala
— Ajithkumar_Samrajyam (@Ak_Samrajyam) April 7, 2023
More exclusive video follow now
Ajithkumar_samrajyam ❤️ pic.twitter.com/g5reSGIM6B