நடிகர் அஜித்தின் மகளா இது? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்
தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய பிரபலமாக கருதப்படும் நடிகர் அஜித்துக்கு தமிழ்நாட்டை தாண்டி இந்திய அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
நரைத்த முடியை வெளிப்படையாக காட்டி நடிக்க மறுக்கும் பல நடிகர்களுக்கு மத்தியில் இது தான் நான், நான் இப்படி தான் நடிப்பேன் என சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்து மாஸ் காட்டி அந்த லுக்கிற்கும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய பெருமை நடிகர் அஜித்துக்கே சேரும்.
தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்துகொண்டிருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் அண்மையில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
அவர் தனது 21-வது திருமண நாளன்று மனைவி ஷாலினியுடன் நடனமாடுவது போல ஷாலினியை தனது மார்போடு சாய்த்தபடி நின்றுகொண்டிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி இணையத்தையே தெறிக்கவிட்டது.
மகளுடன் அஜீத்
அதைபோல் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் இருப்பதுபோன்ற புகைப்படங்களும் சமீபத்தில் பகிரப்பட்டது. அதைபோன்ற மற்றொரு புகைப்படம் தான் இப்போதும் இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது.
அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித், ஷாலினி மற்றும் மகள் அனௌஷ்காவுடன் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகியோரும் உள்ளனர்.
இந்த புகப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாநிதி அழகிரி, ‘சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்னு, அவரை சுற்றி இருக்கும்பொழுது கிடைக்கும் எனர்ஜியை வார்த்தையால் விவரிக்கமுடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.
?? Not a single person in this industry can match the energy of these two fine actors in this frame , as a family they make living look so graceful ! An ULTIMATE evening indeed ?????????????? pic.twitter.com/0MhPM6xi7L
— anusha dhayanidhi (@anushadhaya) May 27, 2022
தமிழ் சினிமாவில் பட தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வரும் தயாநிதி அழகிரி அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை தனது கிளவுட் 9 மூவீஸ் பேன்னர் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அஜித் வலிமை படத்தை தொடர்ந்து தற்போது தனது 61-வது படத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருந்தது.
