ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமண பிரச்சினை... ரஜினி மாலத்தீவு செல்ல இதுதான் காரணம்
நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவிற்கு சென்றதற்கு காரணம் அவரது மகளின் இரண்டாவது திருமண பேச்சு தான் என்று பயில்வான் பகீர் தகவலைக் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் படங்களில் நடித்து முடித்துள்ளார்.
ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரைக்கு வரஉள்ள நிலையில், இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி.
ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நடித்துள்ள மொய்தீன் பாய் கதாபாத்திரத்திற்கான காட்சிகள் முழுவதும் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ள ரஜினி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென மாலத்தீவுக்கு சென்றுள்ளார். வழக்கமாக ஆன்மீக தளத்திற்கு செல்லும் ரஜினிகாந்த் இந்தமுறை மாலத்தீவிற்கு சென்றுள்ளது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மாலத்தீவு சென்றது ஏன்?
இதுகுறித்து சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த ரஜினி மன அமைதிக்காக மாலத்தீவு சென்றிருப்பதாகவும், இதற்கு ஐஸ்வர்யா தான் காரணம்.
ஐஸ்வர்யா தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது உதவி இயக்குனர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், ரஜினிகாந்த் மனம் கஷ்டப்பட்டு மகளை சத்தம் போட்டுவிட்டு மாலத்தீவு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.
அதாவது தனுஷ் விவாகரத்து செய்யும் ஐடியாவில் இல்லை... தனது மகன் மீது அதிக பாசம் வைத்துள்ளார். இதே போன்று உன் மீதும் பாசம் வரும். அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். என்று மகளுக்கு அறிவுரையும் கூறியுள்ளதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |