கணவர் தனுஷ் குறித்து பெருமைபட்ட ஐஸ்வர்யா: 3 மாதத்தில் இப்படியொரு முடிவா?
நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேசிய விருது வாங்கியதற்காக ஐஸ்வர்யா பாராட்டி போடப்பட்ட பதிவு தற்போது ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.
2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருந்து வரும் நிலையில், தற்போது பிரிந்துள்ளனர்.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, அக்டோபரில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்த் இருவரும் புதுதில்லியில் நடந்த மதிப்புமிக்க தேசிய விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்துக் கொண்டனர்.
அந்த விழாவில் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது பெற்றார், அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகர் பிரிவில் தேசிய திரைப்பட விருதை வென்றார்.
இவர்கள் விருது வாங்கியதை தனது இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா, "அவர்கள் என்னுடையவர்கள் ... இது வரலாறு ??#பெருமை மகள்❤️ #பெருமை மனைவி" என்று அந்தப் பதிவுக்கு தலைப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தனுஷ் இடம்பெற்ற அவரது கடைசி பதிவு ஏப்ரல் 2021ல் கர்ணன் திரைப்பட ரிலீஸின் போது இருந்தது. மறுபுறம் தனுஷ், தனது சமூகவலைதளங்களில் தான் நடிக்கும் படங்கள் குறித்த பதிவுகளை மட்டுமே வெளியிட்டுள்ளார். அவரது பதிவுகளில் ஐஸ்வர்யாவை காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் பிரச்சினை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.