மகள் பற்றிய கேள்வியால் கடுப்பான நடிகை ஐஸ்வர்யா ராய்: நடந்தது என்ன?
உலக அழகி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் IIFA உற்சவ விருதுகள் வழங்கும் விழாவில் தனது மகள் பற்றிய கேள்விக்கு கண்டிப்புடன் பதில் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியைச் சேர்ந்த யாஸ் தீவில், இந்த ஆண்டுக்கான IIFA உற்சவ விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விக்ரம், சிரஞ்சீவி, ஏ.ஆர்.ரஹ்மான், மணி ரத்னம், சமந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் பாலிவுட்டில் இருந்து, ஐஸ்வர்யா ராய், ஷாஹித் கபூர், ஷபானா ஆஸ்மி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஐஸ்வர்யாவிற்கு பொன்னியின் செல்வன்- 2 படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விருத வழங்கப்பட்டது.
இதன்போது இதில் கலந்துகொண்ட செய்தியாளர் ஒருவர் ஐஸ்வர்யாராயிடம் பெரும்பாலான நிகழ்ச்சியில் தங்கள் மகள் ஆராத்யா கலந்து கொள்கிறாரே ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஐஸ்வர்யா ராய், அவள் தன்னுடைய மகள் என்பதால் தன்னுடன் இருக்கிறார், நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என ஆவேசமாக பதிலளித்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |