திருமணத்திற்கு நாள் குறிச்சாச்சி.. நடுக்கடலில் நண்பர்களுடன் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய அர்ஜுன் மகள்!
திருமணத்திற்கு முன்னர் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா அர்ஜுனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
திருமணம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகர் அர்ஜுன்.
இவர் பிரபல தொலைக்காட்சியில் “ சர்வைவர்” என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய போது அர்ஜீனின் மூத்த மகளுக்கும் தம்பிராமையாவின் மகன்- உமாபதி ராமையாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
ஆரம்ப காலத்தில் நட்பாக தொடர்ந்த சந்திப்பு காலப்போக்கில் காதலாக மாறியது.
இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டு அர்ஜுன் கட்டிய கோயிலிலி நிச்சயம் செய்து வைத்தனர்.
பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள்
இந்த நிலையில் ஐஸ்வர்யா - உமாபதி திருமணம் எதிர்வரும் 10 ஆம் திகதி பிரமாண்டமாக நடக்கவிருக்கின்றது.
திருமணத்திற்கு இன்னும் 3 நாட்களை வைத்து கொண்டு ஐஸ்வர்யா தங்கை, நண்பர்களுடன் பாலி தீவில் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடி வருகிறார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW