திருமணமான சில மாதங்களில் அடுத்த கொண்டாட்டம்- குஷியில் குடும்பத்தினர்
திருமணமான சில மாதங்களில் ஐஸ்வர்யா அர்ஜூன் வீட்டில் அடுத்த விஷேசம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா அர்ஜூன்
தமிழ் சினிமாவில் “ பட்டத்து யானை ” என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரபல நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜூன்.
இதனை தொடர்ந்து தந்தையின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மேலும், பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியை இவர் காதலித்து வந்தனர். இருவரின் காதலும் வீட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமணம் செய்து கொண்டனர்.
பிறந்த நாள் கொண்டாட்டம்
இந்த நிலையில், நடிகர் அர்ஜீன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மகளுக்கு நிச்சியதார்த்தம் செய்தார்.
இதனை தொடர்ந்து பிரமாண்டமாக திருமணம் சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் திருமணமும் நடந்து முடிந்துள்ளது.
தற்போது புது மணத்தம்பதிகளாக இருக்கும் உமாபதி- ஐஸ்வர்யா இருவரும் குடும்பத்தினருடன் சேர்ந்து சமீபத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திருமணத்திற்கு பின் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால், இந்த பிறந்த நாள் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
அவரது அப்பா ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் கணவர் உமாபதி ஆகியோர், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடிய இந்த பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள், கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![முதன்முறையாக விமானத்தை ஓட்டும் பைலட்டின் சட்டை கிழிக்கப்படுவது ஏன்?](https://cdn.ibcstack.com/article/24b66abf-6677-459c-b9ce-1e1f33b18c9b/25-67ae080907cc3-md.webp)