ஆக்கிரோஷமாக நீருக்குள் நீந்தும் நாகப்பாம்பு! கிணற்றில் குதித்து இளைஞர் செய்த செயல்.... பரபரப்பை ஏற்படுத்திய காட்சி
பாம்பு என்றால் படையும் நடுங்கும். அதுவும் விஷம் அதிகம் உள்ள நாகப்பாம்பு என்றால் நிச்சயம் பலருக்கும் அச்சம் தரும். இந்த பாம்பு குளம் , ஆறு போன்ற தண்ணீரில் இருந்தால் அது அதிக ஆக்ரோஷத்துடன் இருக்கும். அப்போது பாம்புகளிடம் சிக்கினால் சிக்கல் தான்.
Man jumps into well to save a cobra from drowning. It's rare to see someone risk their own life like this. Very admirable. pic.twitter.com/fZF2UsQRlE
— Naveed Trumboo IRS (@NaveedIRS) February 16, 2021
இந்நிலையில் ஆக்கிரோஷமாக இருக்கும் பாம்பின் உயிரை காப்பாற்றிய இளைஞருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. இளைஞர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தைரியமாக கிணற்றில் குதித்து பாம்பை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாம்பை பிடித்த இளைஞர்களின் வீடியோவை டெல்லியைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி நவீத் திரும்பூ வெளியிட்டு பாராட்டி உள்ளார், அவர் தனது பதிவில் நீரில் மூழ்காமல் ஒரு நாகத்தை காப்பாற்ற, இளைஞர் கிணற்றில் குதித்துள்ளார். பாம்பை காப்பாற்ற இப்படி ஒருவர் உயிரை பணயம் வைப்பது அரிது. மிகவும் போற்றத்தக்கது என்று கூறியுள்ளார்.