தினமும் சாப்பிட்டதன் பின்னர் தண்ணீருக்கு பதில் இஞ்சி தண்ணீர் குடித்தால் கிடைக்கும் பலன் என்ன?
எல்லோரும் சாப்பிட்டதன் பின்னர் தண்ணீர் குடிப்பது வழக்கம். இது உணவை ஜீரணித்து சத்துக்களை உடலுக்கு பிரித்து கொடுக்க உதவும். அந்த வகையில் தண்ணீரில் கொஞ்சம் இஞ்சி கலந்து குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
இஞ்சி நம் வீட்டு உணவுகளிலும், வைத்தியங்களிலும் இஞ்சி தவிர்க்க முடியாத ஒரு பொருளாக இருந்து வருகின்றது. அனைத்து உணவுகளிலும் இஞ்சி சேர்க்கப்படும்.
இஞ்சி துவையல், இஞ்சி பச்சடி என சில உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாகவும் இஞ்சி இருக்கிறது. உணவு சாப்பிட்டதன் பின்னர் இந்த இஞ்சி தண்ணீர் குடித்தால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அவை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இஞ்சி தண்ணீர்
இஞ்சியில் இஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஏராளமாக இருக்கிறது. இத உடலில் விக்கம் கொலஸ்ரால் பிரச்சனைகள் எல்லாவற்றையும் இல்லாமல் செய்யும்.
உடல் எடை குறைப்புக்கும் இஞ்சி உதவுகிறது. இஞ்சியில் ஜிஞ்சரால், ஷோகோல் மற்றும் ஜிங்கிபெரீன் போன்ற சக்திவாய்ந்த மூலக்கூறுகள் உள்ளன.இதனால் சாப்பிட்டதன் பின்னர் இஞ்சி தண்ணீர் அருந்தினால் பல நன்மை கிடைக்கும்.
உங்கள் உடலில் இஞ்சி தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தும். இதனால் உடல் எடை சீராக குறையும். அத்துடன் பிற நோய்களை நம்மை அண்டாமல் இது பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதில் இருக்கும் வைட்டமிண் சி, ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்டவை கிருமிகளுடன் சண்டையிட்டு அலர்ஜியை தடுத்து நோய் எதிர்ப்பு செல்களை பாதுகாக்கும்.
உணவு உண்ட பின் இஞ்சித் தண்ணீர் குடிப்பதால் நெஞ்செரிச்சலுக்கு நல்ல தீர்வாக அமையும். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்ற அலர்ஜி எதிர்ப்பு மூலக்கூறுகள் செரிமான கோளாறுகளை தணிக்கும்.
உணவுக்குழாய்க்கும் இது நிவாரணம் அளிக்கிறது. உடலில் இருக்கும் கெட்ட அழுக்குகளை வெளியேற்ற உதவும். இஞ்சியின் சிறப்பான மூலக்கூறுகள் செரிமான நொதிகள், கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். இது தவிர இது ரத்த ஓட்டத்தை சிராக வைத்திருக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |