சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பதால் ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொது இடங்களில் சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சாப்பிட்ட பின்பு இதை செய்றீங்களா?
பொதுவாக பெரும்பாலான நபர்கள் சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இதனை வீட்டில் சாப்பிட்டு முடித்து கை கழுவிய பின்பு செய்வதில் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் வெளியிடங்களுக்கு சென்று இவ்வாறு செய்வதால், பாக்டீரியா, வைரஸ் தாக்கங்கள் ஏற்படுகின்றது.
வீட்டில் சுத்தம் பார்க்கும் சிலர் வெளியிடங்களுக்கு சென்றால் அவ்வாறு பார்ப்பதில்லை. ஆம் திருமண மண்டபம், ஹோட்டல் இவற்றில் சாப்பிட்ட பின்பு அங்கு குழாயில் வரும் தண்ணீரை கொண்டு வாய் கொப்பளிப்பது தவறாகும்.
ஏனெனில் ஹோட்டல், திருமண மண்டபம் போன்ற இடங்களில் தண்ணீர் தொட்டியினை அடிக்கடி சுத்தம் செய்வது கிடையாது.
நீரை போதிய அளவு சுத்தம் செய்யாமல் இருப்பதால் அதில் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற பிரச்சனைகள் நம்மை தாக்குகின்றது.
image: istock
தொண்டையில் ஏற்படும் பிரச்சனை
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் இவர்கள் வெளியிடங்களுக்கு சென்று இவ்வாறு சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பதை தவிர்க்க வேண்டும்.
நாம் அவ்வாறு செய்வதால் எளிதில் தொண்டையில் தொற்று ஏற்படுவதுடன், இது பல உடல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
image: istock
எனவே வெளியிடங்களில் சாப்பிட்ட பின்பு Mouth Rinse செய்ய வேண்டும் என்றால் சுத்தமான தண்ணீரை கொண்டு செய்யவும். அதாவது பாட்டிலில் உள்ள தண்ணீரை பயன்படுத்தவும். இவை நமது ஆரோக்கியத்திற்கும் எந்தவொரு தீங்கையும் ஏற்படுத்துவதில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |